அல் ஹிதாயா இஸ்லாமிய கல்விச்சாலை (AHIA)
ஷரீஅத் கல்வியின் அனைத்துத் துறைகளையும் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அல் ஹிதாயா இஸ்லாமிய கல்விச்சாலை (AHIA) தொடங்கப்பட்டுள்ளது. உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் கற்றுக்கொள்ள எதுவாக, நிகழ்நிலை (Online) வாயிலாக, இக்கல்விகளை வழங்கி வருகிறது.
கல்வியை தேடி வருபவர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக, படித்ததை புரிந்துக்கொண்டு, மனதில் தங்கும் விதத்தில் எளிமையான முறையில் கல்வியை எத்திவைப்பது எமது பிராதான நோக்கம் ஆகும்.
AHIA-ன் பாடத்திட்டம் அனைத்துத் துறைகளின் பாடங்களை மார்க்கக் கல்வியைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள அனைவருக்கும் ஒரு நேரத்தில் ஒரு கற்கைநெறி என்று கவனத்தை குவித்து ஆழமாக கற்று புரிதலை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் எளிமையாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாடத்திங்கள்
அகீதா (கொள்கை)
ஃபிக்ஹ் (மார்க்க சட்டங்கள்)
தஃப்சீர் (அல்குர்ஆன் விளக்கவுரை)
ஹதீஸ் பாடங்கள்
அரபு மொழி (யஸ்ஸர்னல் குர்ஆன், நஹ்வ், ஸர்ஃப், இன்ஷா, பலாகா),
குர்ஆன், ஹதீஸ், ஃபிக்ஹ் ஆகியவற்றின் உஸூல்கள் (அடிப்படைகள்)
அக்லாக்-அதப் (ஒழுக்கம்)
ஸீறா (நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாறு)
தாரீக் (வரலாறு)
மீறாஸ் (சொத்துப்பங்கீடு)
முஃமலாத் (வியாபார சட்டங்கள்)
தஃவா (அழைப்பு)
இன்னும் பல துறைகளில் உள்ள பாடங்களை படிப்படியாக கற்பிக்கவிருக்கிறது.
Location: THANJAVUR, TAMIL NADU